போராட்டத்தில்  ஈடுபடுபட்டவர்கள்  சில அரசியல் குழுக்களால் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டதாக நாமல் குற்றச்சாட்டு.


அரசியல் இலாபத்திற்காக அரகலய என்ற போராட்டம் பயன்படுத்தப்பட்டதாக சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அரகலயாவுடன் தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், ஆனால் அரகலயவில்  பங்கேற்ற சிலருடன் பிரச்சினை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் கடந்த மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காகவே கூடியிருந்ததாகவும், காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவுக்கு அமைப்பு மாற்றம் தேவை என்றும் ஆனால் அரகலையில் ஈடுபடுபவர்கள் தங்களது இறுதி இலக்கு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.போராட்டத்தில்  ஈடுபடுபட்டவர்கள்  சில அரசியல் குழுக்களால் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.