ராகுல் காந்தி பதவி நீக்கம்-நாளை நாடு முழுவதும் போராட்டம்.!

நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில, மாவட்ட தலைநகரங்களில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவின் கோலாறில் நடந்த பொதுத்தேர்தல் பரப்புரையில் “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என்று மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில்,  சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது.

2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம்  அறிவித்து இருந்தது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாளை காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் சிறை தண்டனையை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட உள்ளனர். மேலும் இந்த போராட்டம் காந்தி சிலை முன்பு  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.