பந்துலவுக்கு ஹூ அடித்து எதிர்ப்பு தெரிவித்த நபர் கைது .

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு ஹூ சப்தம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்து விட்டு தப்பிச் சென்றவரை துரத்திச்  சென்று கைது செய்ததாக ஹோமாகம தலைமையகப் பொலிஸார் தெரித்தனர்.

ஹோமாகமவில் இருந்து மொரகஹஹேன நோக்கி பிட்டிபன வடக்கு பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய வர்த்தகர் தனது லொறியில் சென்றுள்ளார்.

அதன்போது, பிட்டிபன சந்திக்கு அருகில் புத்தர் நிறுவுவதற்கு அமைச்சரின் பங்கேற்புடன் அடிக்கல் நடும் நிகழ்வு இடம்பெற்றதைக் கண்ட அவர், அமைச்சருக்கு ஹூ சப்தம் எழுப்பி கடும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு தப்பியோடியுள்ளார்.

லொறியைத் துரத்திச்சென்று அவரைக் கைது செய்த பொலிஸார், கலவரத்தை உருவாக்குதல், சமய விழாவுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நபருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.