நுவரெலியாவில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு !

செ.திவாகரன்

நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் பிரபல்யமான நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியும் . காமினி தேசிய பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது . இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இரு பாடசாலையின் அதிபர்களான எஸ்.ரவிசந்திரன், மற்றும் காமினி தேசிய கல்லூரியின் அதிபர் டப்ளியூ.எம்.நிமால்குமார ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் கல்லூரிகளின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட இரு கல்லூரிகளின் கிரிகெட் அணிகளின் தலைவர்கள் மற்றும் வீரர்கள் மற்றும் பலரும் கலந்துக் கொண்டனர். இச்சந்திப்பு நுவரெலியா கிரேன் ஹோட்டலில் இடம்பெற்றது.

இரண்டு பாடசாலைகளினதும் பராம்பரியத்தினை நினைவுக்கு கொண்டுவருவதோடு, பழைய மாணவர்கள் இடையிலான உறவுகளினையும் கட்டியெழுப்வும் இப்போட்டி நடாத்தப்படுகின்றது.

நு/பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியும் . காமினி தேசிய பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி
இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதம் மூன்றாம் , நான்காம் திகதிகளில் நுவரெலியா மாநகர சபை விளையாட்டு மைதானத்தில் (சினிசிட்டா மைதானம்) நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த கிரிகெட் சுற்று போட்டி தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி நுவரொலியா பிரதான மாநகரில் வாகன பேரணி ஒன்றும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.