ரஷ்யாவில் ஐபோன்  பயன்படுத்த தடை.

ரஷ்யாவில் ஐபோன் பயன்பாட்டை தவிர்க்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபோன் பயன்பாட்டை  தவிருங்கள் அல்லது அதனை தூக்கியெறியுங்கள் என்று நாட்டின் முக்கிய அதிகாரிகளுக்கு ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க தயாரிப்பான ஐபோன், ஸ்மார்ட் போன் சந்தையில் சர்வதேசளவில் அதிகமானோரால் விரும்பப்படுவதாகும்.அமெரிக்காவுக்கு எதிர்நிலையில் களமாடும் ரஷ்யாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த சூழலில் ஐபோன் பயன்பாட்டை தவிர்க்குமாறு தனது முக்கிய அதிகாரிகளுக்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

ஐபோன் பயன்பாடு என்பது, மேற்கு நாடுகளின் உளவு அமைப்புகளின் பொறியில் வலியச் சென்று நாம் சிக்குவதற்கு ஒப்பானது. எனவே ஐபோன் பயன்பாட்டை தவிருங்கள். முடிந்தால் அதனை தூக்கியெறியுங்கள் அல்லது குழந்தைகளிடம் விளையாட கொடுத்து விடுங்கள் என, ரஷ்ய அதிபர் அலுவலகத்தின் உத்தரவினை மேற்கோள்காட்டி அதிகாரபூர்வ நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.