கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்.

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வை வலியுறுத்தி, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

பல ஆசிரியர் சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய வழங்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.