ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாடசாலைகளுக்கு அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ளன.

சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலங்களுக்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.