இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள் – அமெரிக்கா.
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் அன்டனி பிளிங்கன் நேற்று வெளியிடப்பட்ட மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த நாடுகளுக்கான அறிக்கையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் அண்டு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை, நீடித்த மின்வெட்டு, அதிகரித்துச்செல்லும் உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட பொருளாதார நெருக்கடியால் நாடு உள்நாட்டு அமைதியின்மைக்கு தள்ளப்பட்டது.
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் அரசாங்கத் தலைமைப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்காகவும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.