உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டம் அதற்கேற்ப திருத்தப்பட உள்ளது.

நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கை அமைச்சரின் உத்தரவின்படி, கடந்த மார்ச் 16 ஆம் திகதி இந்த சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திருத்தச் சட்டத்தின் மூலம் உள்நாட்டு இறைவரி சட்டத்தின் பல பிரிவுகளில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான திருத்தங்கள் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் திருத்தங்கள் அமல்படுத்தப்படும்.