ஈரானில் பாடசாலை மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா சீற்றம்
ஈரானில் பாடசாலை மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா நிபுணர்கள் தங்களது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஈரானில் சுமார் 1200 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு வேண்டுமென்றே விஷம் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என ஐ.நா நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈரானில் வசிக்கும் பெண்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் திறன் குறித்து நாங்கள் ஆழ்ந்த அக்களை கொண்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனளர். கைதுகள் அறிவிக்கபட்டாலும், பல மாதங்களாக ஈரானிய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்த தவறியுள்ளதாகவும், நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.