வடக்கில் இந்திய தலையீடு: கிழக்கில் சீனத் தலையீடு.
இதன் பிரகாரம் விமான சேவையினை இந்திய விமானங்கள் மூலம் முன்னெடுக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய தூதரக அழுத்தங்காரணமாக சீன நாட்டின், பல்கலைக்கழக மாணவர்களிற்கான புலமைப்பரிசில்களை யாழ்.பல்கலைக்கழகம் நிராகரித்துள்ளது. இந்நிலையில் கிழக்குப்பல்கலைக்கழகத்திற்கு சீனாவின் யுனான் மாகாண பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். கிழக்கு பல்கலைக்கழகத்தினால் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திசார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் அடுத்த கட்டநடவடிக்கையாக சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்துடன் இணைந்து செயற்படவுள்ளமை தொடர்பில் ஆராயும் முகமாகவே, யுனான் மாகாண பிரதிநிதிகள் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.