தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு.

பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்து வருகின்ற நிலையில் தற்போது வரையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொள்கை அளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழரசு கட்சிஇ தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள புளொட், ரெலோ, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய தரப்புக்களுக்கிடையில் முதற்கட்ட பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.குறித்த பேச்சுவார்த்தையின்போது கொள்கையளவில் இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தரப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.அதேநேரம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான ஆரம்பப் பேச்சுக்கள் திருப்திகரமான நிலையில் இல்லாத சூழலில் மீண்டும் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதேபோன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் அடுத்து வரும் காலத்தில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேலம், வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் செயற்படுகின்ற சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் அனைத்தும் ஒருமித்துச் செயற்படுவதற்கு முஸ்தீபு செய்துள்ளன.இது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தமிழ் பேசும் கட்சிகள் ஒருமித்து தென்னிலங்கை மக்களுடன் நேரடியாக உரையாடலை ஆரம்பிப்பதோடு உரிமைகளை கோருவதற்கான நியாயமான விடயங்களை அம்மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

இரண்டாவது விடயமாக, அனைத்து வகையான தேர்தல்களிலும் விட்டுக்கொடுப்புக்களுடன் ஒருமித்து செயற்பட முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து, பொறிமுறையொன்றை நோக்கி நகருதல் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மூன்றாவது விடயமாகஇ தமிழ் பேசும் மக்களுக்கு பொருத்தமான அரசியல் தீர்வினை ஐக்கிய இலங்கைக்குள் பெற்றெடுப்பதோடுஇ அதற்கு முன்னதாக இந்திய அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட இலங்கைஇ இந்திய ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சர்வதேசத்துக்கு இலங்கை அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை பிரயோகத்தலை பற்றி காணப்படுகிறது.