ஆஸ்கார் விருதை தட்டிச்சென்ற இந்திய திரைப்படம்; தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்
95வது ஆக்ஸர் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது. உலக சினிமா கலைஞர்களுக்கு மிக பெரிய உயரிய அங்கீகாரமாக கருதப்படும் விருதுகளில் மிக முக்கியமானது ஆஸ்கர் விருது.
இதில் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த ஆஸ்கார் விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதிகள் குறித்த இந்த ஆவண திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் உருவான இந்த “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” திரைப்படம், யானை கூட்டத்தால் கைவிடப்பட்ட குட்டி யானைகளை பராமரிக்கும் தம்பதிகளைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.