ஆறு திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடு.

ஆறு திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் நினைவுப் பேருரையும் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நல்லூர் கோவில் வீதியில் உள்ள அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்திய நிலையத்தில் நிகழ்வுகள் இடம்பெற்ற நிகழ்வில் முன்னதாக அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டனின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ.சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு திருமுருகன், ஆன்மீகச்சுடர் ரிஷி தொண்டுநாத சுவாமிகள்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.