இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது. வரும் மார்ச் 20ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து முக்கிய ஆலோசனை நடத்தவும், பட்ஜெட் கூட்டத்திற்கு ஒப்புதல் வாங்கவும், இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது. பட்ஜெட் தாக்கலில் பெண்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை, இளைஞர்கள், மாணவர்களுக்கு திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்று நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் , நேற்று ஆளுநர் மாளிகையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட மசோதா பற்றியும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.