அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சுயநலத்துக்காக வடக்கு மீனவர்களைப் பிரித்தாளுகின்றார்: ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் தெரிவிப்பு

‘கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சுயநலத்துக்காக வடக்கு மீனவர்களைப் பிரித்தாளுகின்றார் என ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.இலங்கையிலே மாறி மாறி பல இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. ஒரு சம்பவத்தை மறைப்பதற்காக இன்னுமொரு சம்பவத்தை அரசே உருவாக்குகின்றது.வடக்கில் உள்ள தமிழ் அமைச்சர் மேல் எமக்கு நம்பிக்கை இல்லை. அவர் எம்மைப் பிரித்து, தான் நினைத்தவற்றை சாதிக்கத் துடிக்கின்றார். இதனாலேயே நாம் நேரடியாக ஜனாதிபதியைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம்.வடக்கில் உள்ள 50 ஆயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்களின் பிரச்சினைக்கும் ஓர் அடித்தளமாக இந்தச் சந்திப்பு அமைய வேண்டும் என அவர் மேலம் தெரிவித்தார்.