வவுனியா குடும்பம் மரணம் -இரண்டு பிள்ளைகளின் கழுத்திலும் காயம்.

250

வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள்  மீட்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பிள்ளைகளின் கழுத்திலும் காயம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தாயின் உடலில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை.இதேவேளை. நால்வரின் மரணம் தொடர்பான உடற்கூற்ற பரிசோதனை அறிக்கை நாளை (08) வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த குடும்பம் கடன் தொல்லை போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

42 வயதுடைய தந்தை, 36 வயதுடைய தாய் மற்றும் 3 மற்றும் 9 வயதுகளையுடைய இரண்டு பிள்ளைகளுமே சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.