பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் மிண்டோனோ தீவில் மர்குஷன் நகரில் இன்று மதியம் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை.