ஐ.நாவில் கைலாசா பிரதிநிதி- யார் இந்த விஜயப்பிரியா?

கர்நாடகாவைத் தலைமையிடமாகக் கொண்டு பிடதியில் ஆசிரமம் அமைத்த நித்தியானந்தாவிற்கு கர்நாடகாவில் ஏராளமான சீடர்கள் உள்ளனர். இவர் மீது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்தல், பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பதிவான பலாத்கார வழக்குகளில் இருந்து தப்பிய நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் தனக்கென ஒரு நாட்டை உருவாக்கி கொண்டு அதற்கு கைலாசா என்று பெயரிட்டு கொண்டு அங்கு வாழ்கிறார். ஆனால் அந்த நாட்டின் சரியான இடம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில் பிப்ரவரி 22ம் தேதி ஜெனீவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான 19 வது மாநாட்டின் 73 வது கூட்டம் நடைபெற்றது.

இதில் கைலாசா நாட்டின் அமெரிக்காவின் பிரதிநிதியாக மா.விஜயபிரியா நித்யானந்தா கலந்து கொண்டார். அங்கு பேசும் போது அவர் நித்யானந்தா தனது தாய்நாட்டால் வேட்டையாடப்படுவதாக குற்றம் சாட்டினார் பின்னர்ஐக்கிய நாடுகள் சபையில் தனது அறிக்கை “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, வேண்டுமென்றே திரிக்கபட்டு உள்ளது என்றும் ஊடகங்களின் சில இந்து எதிர்ப்பு பிரிவுகளால் சிதைக்கப்படுகிறது” என்று விஜயபிரியா நித்தியானந்தா கூறி இருந்தார்.

கனடா பல்கலைக்கழகம் ஒன்றில் நுண்ணுயிரியலில் விஜயப்பிரியா பட்டம் பெற்று உள்ளார். தனது சமூகவலைதளத்தில் வாஷிங்டன் டிசியை சேர்ந்தவர் என குறிப்பிட்டு உள்ளார்.பிரெஞ்சு, கிரியோல் மற்றும் பிஜின் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். ஒருபக்கம் தன்னை கைலாசத்தில் வசிப்பவராக காட்டிக் கொள்ளும் விஜயப்ரியா, ரூத்ராட்சம், சேலை என மினுப்பாக இருக்கிறார். மற்றொரு பக்கம், வாஷிங்டனில் வெஸ்டர்ன் ஆடைகளில் இருக்கும் புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

லிங்கிடின் அக்கவுண்டில் அவரை பற்றி தேடினால் சில தகவல்கள் கிடைத்தன. லிங்க்டின் தகவலின்படி, விஜயப்ரியா 2014ஆம் ஆண்டு கனடாவின் மனிடோபா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை அறிவியல் முடித்திருக்கிறார். இவருக்கு ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோல், பிட்ஜின்களில் புலமை உள்ளது. 2022ஆம் ஆண்டு நித்தியானந்தா விஜயபிரியாவை கைலாசாவின் ஐநாவுக்கான தூதராக நியமித்து சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா சபை கூட்டத்தில் பல்வேறு நாட்டு தலைவர்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் தலைவர்களை குறிவைத்து, இந்தியாவில் தேடப்படுகிற குற்றவாளியின் உருவத்தை கைகளில் பச்சை குத்தி, ருத்திராட்சை மற்றும் ஜடாமுடி தரித்த ஒரு பெண் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். சில ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தையும் அந்த தலைவர்களுக்கு ஜடாமுடி பெண் வழங்கினார்.

மறக்காமல் அத்தனை தலைவர்களுடனும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டார் அந்த பெண். எனக்கு பிடித்த நித்தியானந்தா என விஜயபிரியா நித்யானந்தாவை புகழ்ந்து தற்போது பேஸ்புக்கில் கவிதை எழுதி உள்ளார். நித்யானந்தா மீது கொண்ட ஈர்ப்பினால் அவர் சாமியாராக மாலையோடு குலுங்கி சிரிக்க, இவர் பளிச்சென கை இல்லாத பிளவுஸ் அணிந்து மெல்லிய புன்னகையுடன் செல்பி எடுத்து ‘ஐ லவ் சுவாமிஜி’ என்று கூறி உள்லார். அவரது உருவத்தைகையில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார்.