இந்தோனேசியாவில் கனமழை-15 பேர் பலி.

186

இந்தோனேசியாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள செராசன் தீவில் கடந்த சில நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த நிலையில் கனமழை, வெள்ளத்தை தொடர்ந்து செராசன் தீவில் உள்ள பல இடங்களில் நேற்று முன்தினம் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகினர். டஜன் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.