பொலிஸின் வீட்டில் கொள்ளையடித்த கைதிகள்.

ரூபாய் 7 இலட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திலே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரின் உத்தியோகப்பூர்வ இல்லம் பொரளை மகசின் சிறைச்சாலை வளாகத்தில் அமைந்துள்ளதுள்ளதுடன் அது சிறைக்கைதிகளால் சுத்தப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதத்திலிருந்து குடியிருப்பாளர்கள் நகை தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவில்லை எனவும், குறித்த ஊடகப் பேச்சாளரின் மனைவி நகை காணாமல் போயுள்ளதை சமீபத்தில் உணர்ந்து பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெருமளவிலான கைதிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து குறித்த  ஊடகப் பேச்சாளரின் வீட்டை சுத்தம் செய்துள்ளதாகவும் அதனால் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.