20 இலட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு நாட்டுக்கு வருகிறது முட்டை கப்பல்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையுள்ளது.

நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட உள்ள குறித்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளது.