பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கியது.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலும் இந்த வழக்கில் பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்கள், சாட்சிகளிடம் முதல் கட்டமாக தனித்தனியாக விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இவ்வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன் தவிர வசந்த குமார், சதீஷ் ஆகியோரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.