உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது: தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முன்னர் அறிவிக்கப்பட்டவாறு 2023 மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தலை நடத்துவதற்கான புதிய தினம் மார்ச் 3 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.எனினும், தேர்தலுக்கான நிதியை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, தேர்தலை ஒத்திவைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.