எடப்பாடி பழனிச்சாமிக்கு சார்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஓபிஎஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை.
அதிமுக பொதுக்குழு வழக்கிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 2022, ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து, அதிமுக தலைமையகம் மற்றும் பல இடங்களில் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இந்த தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் தரப்பில், மேல்முறையீடு செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். பண்ருட்டி ராமசந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன்இ ஜே.சி.டி பிரபாகர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.