உக்ரைனில் நீடித்த அமைதிக்கான தீர்மானம்-இந்தியா புறக்கணிப்பு.

உக்ரைனில் நீடித்த அமைதிக்கான ஐநா சபை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்துள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து உக்ரைன் நெருக்கடி குறித்து ஐநா பொதுச்சபையில் நடைபெற்ற மூன்று வாக்குகளிலும் இந்தியா இதுவரை வாக்களிக்கவில்லை.

இதையடுத்து உக்ரைனில் நீடித்த அமைதிக்கான தீர்மானத்திக்கான ஐநா பொதுச்சபை வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை. அமைதியை ஏற்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு ஆதரவாக 141 உறுப்பு நாடுகள் வாக்களித்தது.

ரஷ்யா, பெலாரஸ் மற்றும் வட கொரியா உட்பட ஏழு நாடுகள் இதற்கு எதிராக வாக்களித்தன. சீனா, பங்களாதேஷ், கியூபா, ஈரான், பாகிஸ்தான் உட்பட ஏழு நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு 32 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியாவும் அடங்கும்.  ஐக்கிய நாடுகள் பொதுச் சபை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொண்ததையடுத்து நீடித்த அமைதிக்கான இலக்கை அடைய இந்த நடவடிக்கை போதாது என்று உலக அமைப்பிற்கான இந்தியாவின் தூதர் கூறினார்.

இந்த தீர்மானம், ரஷ்யா அதன் அனைத்து இராணுவப் படைகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியது. மேலும் உணவுப் பாதுகாப்பு, எரிசக்தி, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் அணுசக்தி பாதுகாப்பு ஆகியவற்றில் போரின் உலகளாவிய பாதிப்புகளை எதிர்கொள்ள உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது.