இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பினை உருவாக்க சுயாதீன குழு நியமனம்.

 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பினை உருவாக்குவதற்காக 10 பேர் கொண்ட சுயாதீன நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை அறிவிக்க முடியும் என விளையாட்டுத்துறை  அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாணை மனுவின் பிரகாரம் சிறந்த நிர்வாகம்,  வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும், பொதுமக்களின் நலனுக்காக செயற்படும் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட யாப்பைத் தயாரிப்பது கிரிக்கெட்டின் அவசிய தேவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 30  ஆம் திகதி நீதிமன்றத்தில்  சமர்ப்பித்த கடிதத்தின் பிரகாரம் விளையாட்டுத்துறை அமைச்சர் உரிய வரைபு சட்ட ஆலோசனையுடன் நிபுணர் குழு மூலம் விளையாட்டு சட்டங்களை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.