பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி பலி.
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவின் முக்கிய போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன் தினம் பிரான்ஸின் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
திருவேந்தன் மாஸ்ரர் என போராளிகளால் அழைக்கப்படும் 02 ஆம் வட்டாராம் முள்ளியவளைஇ முல்லைத்தீவு மாவட்டத்தினை சொந்த முகவரியாக கொண்ட குணசிங்கம் மோகனராஜன் எனும் முன்னாள் போராளியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.2009 ஆம் ஆண்டு போரின் பின்னர் பாதுகாப்பு கோரி பிரான்ஸ் நாட்டில் வசித்துவந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
அதிவேகமாக சென்ற கார் மோதுண்டமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.அதோடு பிரான்ஸில் பிரபல வானொலியின் அறிவிப்பாளராகவும் அவர் செயற்பட்டு வந்தவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது மரணம் பிரான்ஸ் வாழ் தமிழர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.