ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருக்கும் தாயால் நரபலி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட பெண்.
வளர்ப்பு தாயால் நரபலி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில், ஷாலினி சர்மா என்ற இளம்பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த முதுகலை பட்டதாரியான ஷாலினி சர்மா அவரது வளர்ப்பு தாய் சுதா சர்மா தன்னை நரபலி இடப்போவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுஅளித்துள்ளார் .
மேலும் அவர் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்றும் அவர் மத்யபிரதேசம் செல்ல விருப்பம் இல்லை என்றும் கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்த ஷாலினி சர்மா, இங்கு தட்சணாமூர்த்தி என்பவரது பாதுகாப்பில் உள்ளதாகவும் அவரது தரப்பு வக்கீல் கூறியுள்ளார். மேலும் அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் மனுவில் குறிப்பிடப்படவில்லை.
மேலும் அவரது வளர்ப்பு தாய் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பதாகவும் அவர்களின் தூண்டுதலின் பெயரிலேயே தன்னை நரபலி கொடுக்க முயற்சி செய்வதாகவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார். தன்னை பாதுகாப்பாக இங்கேயே பார்த்துகொள்ளும்படி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஷாலினி சர்மா கூறியுள்ளார்.