4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி. விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் இந்த வார முதல் ஆரம்பம்.

4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம் முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதிக்குமாறு கல்வி அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிப்பதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டதால்,

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.