தவக்காலம் அருளின் காலம் – திருத்தந்தை

தவக்காலம் என்பது இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கும் அருளின் காலம் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 17 வெள்ளிக்கிழமை ஹாஸ்டாக் தவக்காலம் என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள குறுஞ்செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம்முடன் பேசுவதற்கு செவிமடுக்கும் காலம் இத்தவக்காலம் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கும் இத்தவக்காலம் அருளின் காலம் என்றும், நம் உடன் சகோதர சகோதரிகள் மற்றும் தேவையில் இருப்பவர்களின் முகங்களிலும் வாழ்க்கைக் கதைகளிலும் இயேசு நம்முடன் பேசுகின்றார் என்றும் அக்குரலுக்கு செவிமடுப்பதே இத்தவக்காலம் என்றும் அக்குறுஞ்செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக கிறிஸ்தவர்கள் நாளை விபூதிபூதனை ஆரம்பிக்கவிருக்கிற வேளையில் திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் .