யாழ்-QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல்.
QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பெற்றோல் அடிக்குமாறு கோரியுள்ளனர்.
ஊழியர் QR குறியீட்டை கேட்ட போது, QR இல்லாமல் அடிக்குமாறு கூறியுள்ளனர்.
அதற்கு ஊழியர் மறுப்பு தெரிவித்த போது, ஊழியருடன் முரண்பட்டு, தமது உடைமையில் மறைத்து வைத்திருந்த வாளினை எடுத்து ஊழியர் மீது சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.