மார்ச் 1 ஆம் திகதி பாரிய வேலைநிறுத்த போராட்டம்.
மார்ச் 1 ஆம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, எண்ணெய், மின்சாரம், துறைமுகம், நீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, வங்கி அமைப்பு உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.