இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் சிஇஓ-வாக நியமனம்.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாதெள்ளா ஆகியோர் உள்ள நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
நீல் மோகன் 2008ல் கூகுளில் சேர்ந்தார். தொடக்கத்தில் இருந்தே கூகுள் நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். 2012 சமயத்தில் இவர் யூ டியூப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து 2015ல் யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியானார்