மினுவாங்கொட – பொரகொடவத்த பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை .

மினுவாங்கொட – பொரகொடவத்த பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இரவு 9.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய பீலவத்தை அடியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மறைந்திருந்த நபரே இந்த கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.