பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு சீல் .
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு சீல் வைக்க கொள்ளுப்பிட்டி பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் இருந்து பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குறித்த அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, கொள்ளுப்பிட்டி பொலிஸாரால், கோட்டை நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனக்க ரத்நாயக்க தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர் இலங்கை திரும்பிய பின்னர் அவரது அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த திங்கட்கிழமை அவர் அமெரிக்கா சென்றதாக கூறப்படுகிறது.