நுவரெலியா கிரகரி வாவியில் சடலம்.
செ.திவாகரன்
நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியின் நடுப்பகுதியில் சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா பயணிகள் , படகு சவாரி ஈடுபடுவர்கள் கிரகரி வாவியில் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.