மின்கட்டண அதிகரிப்பினை தொடர்ந்து புகைப்பட பிரதியின் விலையும் அதிகரிப்பு!

புகைப்பட பிரதி ஒன்றின் விலையை 5 ரூபாயினால் அதிகரிக்க அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

மின்சாரம், காகிதம் மற்றும் புதிய இயந்திரங்களின் விலை அதிகரிப்பு காரணமாக புகைப்பட நகல் ஒன்றின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ஏ4 அளவு நகல் பிரதி 15 ரூபாயிலிருந்து 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையின் நகல் பிரதி 10 ரூபாயிலிருந்து 15 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அச்சுப் பிரதிகள் வழங்குவதற்கான கட்டணமும் கறுப்பு வெள்ளைப் பிரதி  5 ரூபாவாலும் வண்ணப் பிரதியொன்றுக்கு 10 ரூபாயாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.