இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘கிரிமினல்’திரைப்படம்.

அறிமுக இயக்குனர் தக்ஷிண மூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கின்றனர். மதுரையைப் பின்னணியாகக் கொண்டு கிரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை பார்சா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 23-ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை கவுதம் கார்த்திக் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது. மேலும் ‘கிரிமினல்’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.