இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி?
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்கும் நடைமுறை தொடர்பிலான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விரைவில் புது டெல்லி செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என அமைச்சர் கூறியதாக Daily Mirror பத்திரிகை நேற்று (13) செய்தி வௌியிட்டிருந்தது.
இலங்கைக்கான விஜயத்தை அண்மையில் மேற்கொண்டிருந்த இந்தியாவின் மத்திய இணை அமைச்சர் L.முருகனுடன் இரு நாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.