பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 7 வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களை தடை செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

கரண்டிகள், முட்கரண்டிகள், கத்திகள், தயிர் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரிங் ஹாப்பர் தட்டுகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பிளாஸ்டிக் கோப்பைகள் தடை செய்யப்படவுள்ளன.