சட்டததரணி தவராசாவின் வாதத்தை அடுத்து தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் விடுதலை.

14 ஆண்டுகளாக சிறையில் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் நால்வர் ஜனாதிபதி சட்டததரணி தவராசாவின் வாதத்தை அடுத்து விடுதலை   செய்யப்பட்டுள்ளனர்.இதன்படி தமிழ் அரசியல் கைதியான கந்தையா இளங்கோ உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு, காலி மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த நால்வருக்கும் பிணை வழங்கி நீதவான் உத்தரவு பிறப்பிதார்.

கடந்த  2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 18 ஆம் திகதி காலி தெற்கு கடற்படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததுடன், 22 பேர் காயமடைந்தனர். இது தொடர்பில் குறித்த நால்வர் மீதும் 23 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.