நுவரெலியாவில் இ.போ.ச பேருந்தின் சில்லு கழன்று விபத்து.
பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து ஓடிக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய நிலையில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
இன்றைய தினம் பிற்பகல் நுவரெலியா – பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியது.
இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டது என தகவல்கள் தெரிவித்தனர் .