வடக்கின் பல பிரதேசங்களைப் பார்வையிட்ட இந்தியக் குழுவினர்.

இந்திய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட இந்தியக் குழுவினர் தனி விமானம் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் சென்றடைந்தனர்.

யாழ்ப்பாண நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதோடு காங்கேசன்துறைககு சென்று  அங்கு பாண்டிச்சேரிக்கும் காங்சேன் துறைக்கும் இடையே தொடங்கப்படவுள்ள பயணிகள் கப்பல் சேவையின் சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தனர். அடுத்து மயிலிட்டி மீன் பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, எல்லை தாண்டிய குற்றத்திற்காகப் பறிமுதல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விசைப்படகுகளையும் பார்வையிட்டனர்.

பின்னர் மன்னார் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் 150 பேருக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கும் நிகழ்விலும் இந்தியக் குழுவினர் பங்கேற்றனர்.இன்று காலை மன்னார் திரக்கேதீஸ்வரம் ஆலயத்தை தரிசித்தனர்.