13 ஆம் திருத்தத்தை நீக்கக் கோரி பிக்குகள் போராட்டம்.

இலங்கையின் அரசியலமைப்பிலுள்ள 13 ஆம் திருத்தத்தை நீக்கக் கோரி இன்று (08) கொழும்பில் தேரர்கள் ஒன்றுகூடி போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.

5000 தேரர்களை கொழும்பிற்கு கொண்டு வந்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை விடுத்த தேரர்கள் 13 ஆம் திருத்தத்தை நீக்கவேண்டும் என்றனர்.

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்தக் கூடாது என ஜனாதிபதிக்கு நான்கு பிரதான பௌத்த பீடங்கள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.