நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலய முன்னால் அதிபருக்கு பிரியாவிடை நிகழ்வு.
செ.திவாகரன்
கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நானுஓயா கிளாசோ தமிழ் வித்தியாலய பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றிய முன்னால் அதிபர் சுப்பையா பிள்ளை கோகிலவாணி அவர்களின் பிரியாவிடை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை கிளாசோ ஏஏடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அதிபரை பாடசாலைச் சமூகத்தினர் மலர் மாலைகள் அணிவித்தும் பூச்செண்டுகள் வழங்கியும் வரவேற்றனர் அதன் பின் பாடசாலைக்கீதம் இசைக்கப்பட்டு பாடசாலையின் பழைய மாணவ மாணவிகளால் அதிபருக்கு மலர் மாலைகள் அணிவித்தும் ஆசீர்வாதமும் பெற்றனர்.
ஆசிரியர்களின் வாழ்த்துச் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன.இந் நிகழ்வில் பாடசாலையின் தற்போதைய அதிபர் , கார்லபேக் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் திரு.நிசாந்தன் , நுவரெலியா பிரதேச சபை உறுப்பினர் ஜீ.நிரோசன் மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவாகள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.