15 ஆயிரம் உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி.

15 ஆயிரம் உக்ரேனிய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்தள்ளதாக வெளியுறவுக் கொள்கை தலைவர், ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், 15000 உக்ரேனிய வீரர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்படி பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்கிறது எனத் தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்த திட்டம், ரஷ்யாவிற்கு எதிராக உக்ரேனிய ஆயுதப்படைகளின் இராணுவத்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டள்ளமை குறிப்பிடத்தக்கது.