பிரித்தானியாவில் தண்ணீர் கட்டணம் உயர்கிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தண்ணீர் கட்டணம் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்க வரலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இதன்படி சராசரி வாடிக்கையாளர்கள் ஆண்டுதோறும் 31 பவுண்ட்ஸ் அதிகமாக செலுத்த வேண்டி ஏற்படும் என பிரித்தானியாவின் தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை காரணமாக குறைத்த வருமாணம் கொண்டவர்கள் பாதிக்கப்படலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு உடனடி நிவாரணம் தேவை எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.