நான்கு நாட்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்த கோரிக்கை!

இன்று (03) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த நான்கு நாட்களிலும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.