தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில் மாவை சேனாதிராஜாவின் மகன் அமுதன் ஆவேசம்.

யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வளமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் கொண்டு கட்சியின் தலைமைக்கு எதிராக கொட்டித்தீர்த்துவிட்டதாகவும் மாநாட்டில் கலந்துகொண்ட பலர் தெரிவித்தனர்.

தமிரசுக்கட்சியின் கூட்டங்களில் , பேச்சாளர்  பெரியவர்களின் பேச்சுக்கள்  மட்டுமே வழமையாக பேசுகின்ற கூட்டத்தில் இன்று நடந்த கூட்டத்தில் மாவையின் மகனும் தமிழரசுக்கட்சி இளைஞரணியின் முக்கியஸ்தருமான அமுதன் தந்தை என்றும் பார்க்காமல் கட்சியின் தலைமையை ஆத்திரத்தோடு கேள்விகளைக் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மேயர் பதவிக்கு யாழ் வர்த்தகர் சங்கம் ஒரு நபரை சிபாரிசு செய்வதற்காக மாவையை அணுகியபொழுது, அதற்கு மாவை தமிழரசுக்கட்சியின் இன்னொருவரின் பெயரைக் கூறி ‘அவரிடம்தான் கேட்கவேண்டும்’ என்று கூறியதாகவும், அதனால் தமிழரசுக்கட்சியின் தலைமை மீது அதிருப்தியடைந்த யாழ் வர்த்தகர் சங்கம் வேறு கட்சியின் பக்கம் போய்விட்டதாகவும் சுட்டிக்காண்பித்த அமுதன், மாவையின் அந்த செயலை பகிரங்கமாகக் கண்டித்ததாக தெரியவருகின்றது.ஓன்று ‘ஆம்’ என்று தலைமை பதில் கூறியிருக்கவேண்டும்.. அல்லாவிட்டால் ‘இல்லை’ என்று மறுத்திருக்கவேண்டும்.. இரண்டையும் செய்யாமல் எதற்காக கட்சியில் தீர்மானிக்கும் பதவியெதனையும் வகிக்காத மற்றொருவர் மீது கைகாண்பித்தீர்கள்?’ என்று கேள்வியெழுப்பியிருந்தார்.

கட்சித் தலைமையின் பலவீனத்தைச் சுட்டிக்காண்பித்த அமுதன், ‘கட்சி தொடர்ந்து இவ்வாறே வழிநடாத்தப்படுமாக இருந்தால், கட்சியைவிட்டு தான் உட்பட பல இளைஞர்களும் வெளியேறவேண்டி ஏற்படும்’ என்றும் எச்சரிக்கைவிடுத்தார்.